உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விளையாட்டு

இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி…



மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 154 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

50 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2ஆம் இன்னிங்ஸைத் தொடர்ந்த மேற்கிந்தியத்தீவுகள் 93 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

144 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு பதிலளித்தாடிய இலங்கை அணி, 5 விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்களுடன் இன்றைய 4ஆம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.

தில்ருவான் பெரேரா 23(68), குசால் பெரேரா 28(43) ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிபெற செய்தனர்.

இலங்கை அணி 40.2 ஓவர்களில் 6 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஹேசன் ஹோல்டர் தெரிவானார். தொடர் முழுவதும் பிரகாசித்த ஷேன் டவ்ரிச் தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதை வென்றார்.

Related posts

துண்டித்த நிலையில் மனித தலை ஒன்று கண்டுபிடிப்பு..

wpengine

பலபிடிய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் பலி

wpengine

குத்தகை முறை – வாகனங்களுக்கு சலுகை

wpengine