உள்நாட்டு செய்திகள்

ஞானசார தேரரின் விடுதலைக்காக சாகும் வரையிலான உண்ணாவிரதம்…



கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நாளைய(22) தினத்திற்குள் பிணை பெற்றுக்கொள்ள முடியவில்லை எனின், சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக பொதுபல சேன அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிணை மனு நாளை(22) விசாரணை செய்யப்பட உள்ளதாக, குறித்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனியே நந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேன அமைப்பினர் நேற்று(20) கோட்டை ஆலமரத்தடியில் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

டிக்கோயாவில் முச்சக்கர வண்டி விபத்து! நான்கு பேர் படுகாயம்

wpengine

இலங்கையின் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்

wpengine

களனி பாலத்தினூடாக வாகன போக்குவரத்து மட்டு

wpengine