உள்நாட்டு செய்திகள்

மாத்தறை – கொழும்பு மற்றும் அதிவேக வீதி தனியார் பேரூந்துகள் பணிபுறக்கணிப்பு…



தெற்கு அதிவேக வீதியின் அனைத்து தனியார் பேரூந்துகள் மற்றும் மாத்தறை – கொழும்பு தனியார் பேரூந்துகளும் இன்று(20) காலை முதல் பணிபுறக்கனிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று(19) அம்பலாங்கொட பிரதேசத்தில் தனியார் பேரூந்து சாரதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் போக்குவரத்து ஆணைக்குழு தலைவரின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பணிப்புறக்கனிப்பில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாக்குதல் நடத்திய நபரை விரைவாக கைது செய்யுமாறும், போக்குவரத்து ஆணைக்குழு தலைவரின் கேள்விப்பத்திர முறைக்கு மாறான செயற்பாட்டை நிறுத்துமாறும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்தக் கோரிக்கைகளுக்கு நாளைய தினத்திற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

வௌ்ளை சீனி இறக்குமதிக்கு அனுமதி

wpengine

தலவாக்கலை நுவரெலிய பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு…

wpengine

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

wpengine