உலக செய்திகள்

சிரியாவின் தாக்குதல்களுக்கு அமெரிக்காவே பொறுப்புக் கூற வேண்டும்…



சிரியாவின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அரச ஆதரவுப் படை வீரர்கள் 22 பேர் பலியானதைத் தொடர்ந்து, சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் என ஈராக் குற்றஞ்சாட்டியுள்ளது.

சிரியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சிரிய – ஈராக்கிய எல்லையினருகே நேற்று முன்தினம் இரவு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில், சிரிய நாட்டினர் அல்லாத சிரிய அரசின் ஆதரவு பெற்ற வெளிநாட்டு படை வீரர்கள் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியாவுக்கான மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் தெரிவித்திருந்தார்.

சிரிய – ஈராக்கிய எல்லை அருகேயுள்ள அல்-ஹரி எனும் இடத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளதாகவும் அமெரிக்கக் கூட்டுப்படைகள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் சிரிய ஊடகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

Related posts

மலேசிய பிரதமர் நஜீப் மீது ரூ.4300 கோடி ஊழல் புகார்

wpengine

சுற்றுலா விமானம் நொறுங்கி விழுந்து விபத்து – 4 பேர் உயிரிழப்பு…

wpengine

சீனாவில் கடும் பனிமூட்டம் – 30 வாகனங்கள் மோதிய விபத்தில் 18 பேர் பலி…

wpengine