உலக செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து- சுற்றுலா சென்ற 6 மாணவர்கள் உயிரிழப்பு…



உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ரா – லக்னோ இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து மோதியதில் சுற்றுலா சென்ற 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சாந்த் கபீர் நகர் பகுதியில் இருந்து கல்லூரி மாணவர்கள் இரண்டு பேருந்துகளின் மூலம் ஹரித்வார் நோக்கி சுற்றுலா சென்று கொண்டிருந்த அப்போது, ஆக்ரா – லக்னோ இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து எரிபொருள் இன்றி நின்று போனது.

இதனால் பேருந்தில் இருந்த மாணவர்கள், மற்றொரு பேருந்தில் இருந்து சிறிது எரிபொருள் எடுத்து நிரப்பும் வரை கீழே இறங்கியுள்ளனர்.

இதன்போது, அதிவேகமாக வந்த பேருந்து, மாணவர்கள் மீது மோதியுள்ளதுடன், இந்த கோர விபத்தில் 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

இந்தியா-பாகிஸ்தான் போருக்கு வாய்ப்பு-இம்ரான்கான்

wpengine

கனடா பிரதமர் இந்தியா விஜயம்…

wpengine

இம்ரான் கானின் கட்சியானது 114 தொகுதிகளில் முன்னிலையில் – தேர்தல் முடிவுகளில் தாமதம்…

wpengine