உள்நாட்டு செய்திகள்

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது…



இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆராச்சிகட்டுவ பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மத்திய அதிவேக வீதியின் விலைமனு கோரல் செயற்பாடுகள் குறித்து விசாரணை..

wpengine

சுயமாக வேலையில் இருந்து விலக ரூபவாஹினி ஊழியர்களுக்கு அறிவித்தல்

News Editor

இரு மதுவரி அதிகாரிகள் கைது

Azeem Kilabdeen