உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகர் நியமிப்பு இன்று…



பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகர் இன்று(06) நியமிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் இராஜினாமா தொடர்பில் அன்றைய இன்று உத்தியோகப்பூர்வமாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்த திலங்க சுமதிபால உள்ளிட்ட 15 பேர் அரசாங்கத்திலிருந்து விலகியதினை தொடர்ந்து, பிரதி சபாநாயகர் பதவியிலிருந்தும் விலகுவதாக திலங்க சுமத்திபால அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

கொள்ளளவை எட்டியுள்ள 27 நீர்த்தேக்கங்கள்

Azeem Kilabdeen

லஹிரு வீரசேகர சற்று முன்னர் கைது..

wpengine