உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு…



காலி – கொழும்பு பிரதான வீதியில் பேருவளை பகுதியில் இன்று(03) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளொன்று டிப்பர் வாகனமொன்றை முந்திச்செல்ல முற்பட்ட வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஹபுருகல, பென்தர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த பொலிஸ் அதிகாரி களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றியவராவார்.

விபத்து தொடர்பில் டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியின் போது, கல்வியமைச்சுக்கு முன் அடித்து விரட்டப்பட்ட ஆசிரியர்கள்..!

wpengine

நாடளாவிய ரீதியில் தற்போது இடியுடன் கூடிய மழை..

wpengine

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

wpengine