Uncategorized

எதிர்வரும் 24ஆம் திகதி முதல் பொசொன் நோன்மதி வாரம்…



பொசொன் நோன்மதி தினம் ஜுன் 27ஆம் திகதி ஆகும். இத்தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 24ஆம் திகதியிலிருந்து 30ம் திகதி வரையில் அனுஷ்டிக்கப்படும் என பொசொன் நோன்மதி குழுவின் தலைவரும் அனுராதரபுர மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹாபோதியிலும் ருவன்வெலி மாசெயவிலும் மத வழிவாடுகள் இடம்பெறவுள்ளன. அதேபோன்று மிஹிந்தலை மற்றும் தந்திரி மலையிலும் வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு மத வழிபாடுகளில் கலந்து கொள்வதற்காக சுமார் எட்டு முதல் பத்து இலட்சம் வரையிலான பக்தர்கள் இம்முறை அனுராதபுரத்திற்கு வருகைதரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு பொசொன் நோன்மதி குழுக் கூட்டத்தில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆர்.எம்.வன்னிநாயக்க தெரிவித்தார்.

ஜயஸ்ரீ போதிக்கு அருகாமையில் இடம்பெறும் வாராந்த பிரித் பாராயணம் எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகி 27ம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அடுத்த மாதம் பூமியை கடக்கவுள்ள விண்கல்.. அழியுமா பூமி?

wpengine

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்

wpengine

இரண்டாம் நிலை வரவு செலவுத்திட்ட வாசிப்பு இன்று பாராளுமன்றில் முன்னெடுக்கப்படவுள்ளது

wpengine