ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இந்த வருடத்துடன் அரை சொகுசு பஸ் சேவை நிறுத்தம்….



எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் அரை சொகுசு பஸ் சேவையை நிறுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரை சொகுசு பஸ்களில் ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிகமான பயணிகள் ஏற்றப்படுகின்றமை தொடர்பில் தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த பஸ்களில் சாதாரண பஸ்களை விட பயணச்சீட்டு கட்டணம் அதிகம் அறவிடப்பட்டாலும் பயணிகளுக்கு உரிய வசதி கிடைப்பதில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக அரை சொகுசு பஸ்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் சொகுசு அல்லது சாதாரண பயணிகள் போக்குவரத்திற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related posts

திலான் சமரவீர நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக நியமனம்

wpengine

முதலாவது இருபதுக்கு – 20 போட்டியில் விளையாடும் இறுதி 11 வீரர்கள் இவர்கள் தான்..

wpengine

உலகக் கிண்ணத்தில் மாலிங்க ஒரு பிரபல துரும்பு…

wpengine