உலக செய்திகள்

‘பர்தா’ அணியத் தடை – மீறினால் அபராதம்…



டென்மார்கில் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் பர்தா போன்ற ஆடைகள் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

முகத்தை மறைக்க தடை குறித்த சட்ட வரைபை நேற்று(31) அந்நாட்டு அரசு, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.

75 பாராளுமன்ற உறுப்பினர்கள், குறித்த இந்த தடைச் சட்டத்துக்கு ஆதரவாகவும், 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

இந்த சட்ட வரைபு வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, பொது இடங்களில் எவரேனும் முகத்தை திரையிட்டு மறைத்திருந்தாலோ அல்லது முகத்தை மறைக்கும் விதமாக பர்தா அணிந்து இருந்தாலோ அவர்களுக்கு அபராதத்துடன் கூடிய தண்டனை வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரேசில் ஜனாதிபதி றூசெப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

wpengine

போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம்…

wpengine

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது…

wpengine