உலக செய்திகள்

அயர்லாந்தில் கருக்கலைப்பு சட்டங்களை மாற்ற 66 சதவீதம் மக்கள் ஆதரவு…



அயர்லாந்தில் கருக்கலைப்பு தடைச்சட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கருக்கலைப்புக்கு 66.4 சதவீத வாக்குகள் ஆதரவாகவும், எதிராக 33.6 சதவீத வாக்குகளும் பெறப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. கர்ப்பிணித் தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய சட்டம் அனுமதிக்கிறது.

கருக்கலைப்பு சட்டத்தை மறுவரையறை செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் பேரணி நடத்தினர். இதையடுத்து சட்டத்தை மாற்ற அரசு முன்வந்தது. அதன்படி கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக, மக்கள் கருத்தினை அறியும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதற்காக நாடு முழுவதும் 6,500 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் கருக்கலைப்புக்கு ஆதரவாக சுமார் 66 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

Related posts

லிபியாவில் அகதிகள் படகு விபத்து 50 பேர் பலி…

wpengine

சவுதி பட்டத்து இளவரசர் தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டும் – கஷோகியின் காதலி

wpengine

கடும் மழை காரணமாக 25 பேர் உயிரிழப்பு

wpengine