உலக செய்திகள்

மெகுனு புயலினால் 5 பேர் உயிரிழப்பு…



எமனில் சொகோட்ரா தீவை மெகுனு என்ற புயல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 40 பேரை காணவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எமனில் சொகோட்ரா தீவு தெற்கு எமனுக்கும், ஆப்பிரிக்கா கண்டத்துக்கும் இடையே அமைந்துள்ளது.

புயல் கரையை கடக்கும் போது பயங்கரமாக காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சொகோட்ரா தீவில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

புயல் தாக்குதலுக்கு 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் ஒருவர் இந்தியர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 40 பேரை காணவில்லை எனவும், அவர்கள் எமன், இந்தியா மற்றும் சூடான் நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் தாக்கியுள்ள சொகோட்ரா தீவில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு புரூனேவில் புதிய சட்டம் அறிமுகம்..

wpengine

பனாமா விவகாரத்தில் சிக்கிய புதின் – கொதிக்கும் ரஷிய அதிபர் மாளிகை

wpengine

216 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயல் காரணமாக 6 பேர் உயிரிழப்பு…

wpengine