உள்நாட்டு செய்திகள்

பிரேமலால் ஜயசேகரவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு



கொலை குற்றச்சாட்டு சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெலிகடை சிறையில் இருக்கும் அவர் கடந்த 9 ஆம் திகதி வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் மைத்திரிபால சிறிசேனவின் பிரச்சாரக் கூட்டம் ஒன்றுக்காக சோடிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த சாந்த தொடாங்கொட என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளரை சுட்டுக்கொன்றதாக முன்னாள் பிரதியமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர உட்பட 8 பேர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகலை தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரான பிரேமலால் ஜயசேகரவின் தேர்தல் பிரச்சாரம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

இராணுவ அதிகாரிகள் 10 பேருக்கு பதவி உயர்வு…

wpengine

இலங்கை போராட்டம்; இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கை!

wpengine

புத்தளம் வரையான புகையிரதம் லுனுவில புகையிரத நிலையத்துடன் மட்டு…

wpengine