உள்நாட்டு செய்திகள்

நிஸ்ஸங்க சேனாதிபதியின் மனு பிற்போடப்பட்டது..



எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியினால் தன்னை இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்படுவதை தடை செய்து உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ஜூன் மாதம் 08ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று (23) பிரியந்த ஜயவர்தன மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது நீதிபதி முர்து பெர்ணான்டோ குறித்த வழக்கை விசாரிக்க விரும்பாத காரணத்தால் மனுவை பிற்போடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் சென்ற சம்பவத்தில் தன்னை கைது செய்து விளக்கமறியலில் வைப்பதற்கு இரகசியப் பொலிஸார் முயற்சிப்பதாக நிஸ்ஸங்க சேனாதிபதி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ரியாஜினால் ஜனதிபதிக்கு கடிதம்

wpengine

மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கக்கூடும்…

wpengine

கருக்கலைப்பை சட்டரீதியாக்குவது குறித்த கருத்து தொடர்பில் சுகாதார அமைச்சர் தெளிவு..

wpengine