உள்நாட்டு செய்திகள்

மஹிந்தர் இன்றி குருநாகலில் வேட்புமனுத் தாக்கல்



மஹிந்த ராஜபக்ஷ இன்றி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குருணாகல் மாவட்டத்திற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்காக இன்று காலை குருணாகல் மாவட்ட செயலகத்திற்கு சென்றனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு சமூகமளித்திருக்கவில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுவை தாக்கல் செய்யும் நிகழ்வில் அனுரபிரியதர்ஷன யாப்பா, தயாசிறி ஜயசேகர, சட்டத்தரணி கோமின் தயாசிறி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனுவை அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, அமைச்சர் அகில விராஜ் காரியவசம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன ஆகியோர் தாக்கல் செய்தனர்.

(riz)

 

 

Related posts

தேசிய விபத்து தடுப்பு வாரம் இன்று ஆரம்பம்

wpengine

இன்றைய அரசியல்வாதிகள் நம் சிறுபான்மை குறித்து கவலைப்படுகின்றதா?

wpengine

கண்டி : 45 பாடசாலைகளுக்கு பூட்டு

wpengine