உள்நாட்டு செய்திகள்

சைட்டம் மாணவர்களை கொத்தலாவலவுக்கு அனுப்பும் அமைச்சரவை பத்திரத்திற்கு எதிர்ப்பு…



கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரிக்கு உட்சேர்ப்பது குறித்து அமைச்சரவை பத்திரம் முன்வைப்பது தொடர்பில் கடும் எதிர்ப்பினை வெளியிடுவதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவில், உயிரியல் பிரிவில் 03 பாடங்கள் சித்தி பெறல் அல்லது அரச வைத்திய பீடத்திற்கு உள்வாங்கும் தகுதி, சைட்டம் மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு உட்சேர்ப்பதற்கான ஆரம்ப தகுதிகள் என குறித்த அமைச்சரவை பத்திரத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதனை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

உயிரியலில் C சித்தி 2 மற்றும் S சித்தி உள்ள ஆகக் குறைந்த தகைமையினை அற்ற சைட்டம் மாணவர்களை கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு உட்சேர்த்து பயிற்சியின் மூலம் அவர்களுக்கு கொத்தலாவல பல்கலைக்கழகத்தினூடாக பட்டம் வழங்குவதற்கும் குறித்த சங்கம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

Related posts

சொத்து விபரங்களை வெளியிட மறுக்கும் அரசியல்வாதிகள் மீது சட்ட நடவடிக்கை – மஹிந்த…

wpengine

கந்தானையில் அன்னை மரியாள் போன்று சுற்றித்திரிந்த பெண் யார் – பொலிஸார் வெளிப்படுத்திய தகவல்..!

wpengine

விமல் பிணை கோரி தாக்கல் செய்திருந்த மனுவிற்கு எதிர்ப்புகள் இருக்குமாயின் தெரிவிக்குமாறு நீதிமன்றம் அறிவிப்பு…

wpengine