உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சபாநாயகரை விசாரிக்க CID பாராளுமன்றிற்கு…



சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் சம்பவம் தொடர்பில் விசாரிக்க நாளை(18) மாலை 06:30 மணியளவில் பராளுமன்றிற்கு வருகை தரவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சபாநாயகருக்கு அறிவிக்கபப்ட்டுள்ளது.

குறித்த இந்த கடத்தல் குறித்து அப்போதைய அமைச்சர் கரு ஜயசூரிய, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அறிவித்திருந்தார்.

கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எவ்வாறு தகவல்கள் கிடைக்கப் பெற்றன என்பது குறித்தும், எவ்வாறு கரு ஜயசூரிய நொயாரின் உயிரைக் காப்பாற்றினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

தமது தலையீட்டினால் நொயாரின் உயிரை காப்பாற்ற முடிந்தது எனவும், தாமே கடத்தல் குறித்த தகவலை அப்போதைய ஜனாதிபதிக்கு அறிவித்ததாகவும் சபாநாயகர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma

Related posts

இதுவரை 894 கடற்படையினர் குணமடைந்தனர்

wpengine

அங்கொட லொக்காவின் சகாக்கள் மூவர் கைது

wpengine

இலங்கைக்கு GSP பிளஸ் வரிச்சலுகை வழங்க ஆதரவளிக்கிறது பிரான்ஸ்

wpengine