உள்நாட்டு செய்திகள்

கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் சில வாரங்களில்…



கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் சில வாரங்களில் பூர்த்தி செய்யப்படும் என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

2016ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்காக போட்டிப் பரீட்சை இடம்பெற்றது. இதற்கான நேர்முகப் பரீட்சை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 22ம் திகதி முதல் நவம்பர் மாதம் 21ம் திகதி வரை நடைபெற்றது.

இதற்கமைய தகுதியைப் பூரத்தி செய்த பரீட்சார்த்திகளுள் 1730 பேர் நியமனத்திற்காகத் தெரிவாகியுள்ளனர்.

இதற்கமைவாக, புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான கடிதங்களை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் சில வாரங்களில் இடம்பெறும்.

14022 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளில் கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

துறைமுக பணியாளர்களால் நாளை முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்தம் ரத்து

wpengine

ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து சரண விடுதலை

wpengine

அமைச்சுப் பதவி: கம்மன்பில ஜனாதிபதி – பிரதமருக்கு கடிதம்

wpengine