உள்நாட்டு செய்திகள்

வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்…



வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதிகள் இன்று(15) சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு அநீதி இடம்பெறுவதாகவும் போதைப்பொருள் பாவனைகளும் அதிகளவில் இடம்பெறுவதாகவும் தெரிவித்து வவுனியா சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனை அடுத்து வவுனியா சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பாவனை இருப்பதாகவும் சட்ட விரோதமாக சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வருவதாகவும் தெரிவித்து கைதி ஒருவரை நேற்று(14) சிறைக்காவலர்கள் தாக்கியமையால் அக்கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக சிறைக்கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட;டதையடுத்து, இன்று (15) சிறைக்கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

இலங்கை விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் சிவப்பு சமிஞ்சை.

wpengine

‘மரச்சின்னத்துக்கு அளிக்கும் வாக்குகள் கடலில் கொட்டப்படுவது போன்றதாகும்’ முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட்!

wpengine

கடலலை சீற்றம் காரணமாக காலி வீதிக்கு பூட்டு

wpengine