கேளிக்கை

மோகன்லாலை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் முக்கிய பிரபலம்…



கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் சூர்யாவின் 37-வது படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலை தொடர்ந்து தெலுங்கு நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்.ஜி.கே.’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார்.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மேலும் ஒரு முக்கிய பிரபலம் இப்படத்தில் இணைந்திருக்கிறார். பிரபல தெலுங்கு நடிகரான அல்லு சிரிஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன்ஸ் பணிகள் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

Image result for allu sirish

Related posts

உலக நாயகனுடன் மாஸ்டர்

wpengine

வைத்தியர் சேதுராமன் காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்

wpengine

அவருக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது – கீர்த்தி…

wpengine