உள்நாட்டு செய்திகள்

தெமட்டகொட புதிய வீடுகள் – இன்று மக்களிடம் கையளிப்பு…



கொழும்பு தெமட்டகொட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 437 வீடுகள், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரது தலைமையில் இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் வீட்டுக்கு பதிலாக வாழ்க்கை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் பல இடங்களிலும் தோட்டங்கள் என்று அழைக்கப்படும் குடியிருப்புக்களில் வாழ்ந்த 50 ஆயிரம் இல்லக் கூறுகளுக்கு நவீன வசதிகளைக் கொண்ட வீடுகளை வழங்கி, அடுக்கு மாடி தொகுதிகளில் குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்கின்றது. இதற்கான திட்டத்திற்காக அரசாங்கம் சமார் 750 கோடி ரூபாவை முதலீடு செய்கின்றது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் நலன்கருதி 2020ஆம் ஆண்டிற்குள் ஒன்பதாயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளை அமைப்பதற்கான திட்டம் அமுலாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயர்வு

wpengine

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியாக வேலை நிறுத்தத்திற்கு தயார்…

wpengine

கரதியான குப்பை மேட்டில் தீ பரவல்

wpengine