உள்நாட்டு செய்திகள்

ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை…



பண்டாரவளையில் தற்போது நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் அதிகரித்துள்ளதுடன் ஏனைய நாட்களை விடவும் அதிக நீர் வெளியேறி செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், நீர்வீழ்ச்சியில் யாரும் குளிக்க செல்ல வேண்டாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். குளிக்க சென்றால் உயிர் ஆபத்துக்கள் ஏற்பட கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதிக்கு செல்வதனை தற்போது தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளிடம் பொலிஸார் கேட்டு கொண்டுள்ளனர்.

Related posts

ஞானசார தேரருக்கு விடுதலை

wpengine

35 இலட்சம் பேருக்கு மின் கட்டணத்தில் 55% சலுகை..!

wpengine

CID யின் பிரதி பொலிஸ்மா அதிபராக நுவன் வேதசிங்க

wpengine