உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…



மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மில்லி மீட்டர் அளவான கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் கடும் மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பிலிருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 – 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுடன் மாத்தளை மாவட்டத்தில் சில இடங்களிலும் வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

5000 ரூபா நாணயத்தாள் தடை செய்யப்படும் இலக்கு..?

wpengine

களனி, கம்பஹா பிரதேசங்களில்  ஞாயிறு நீர் விநியோகத்தில் தடை  

wpengine

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம்..!

wpengine