வணிகம்

75 சதவீதமான ஆடைத்துறை தயாரிப்புக்கள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி…



பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் 75 சதவீதமானவை ஆடைத்துறை தயாரிப்புக்கள் என்றும் இவற்றின் வர்த்தக பெறுமதி சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் ரொறிஸூடன் அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

மேலும், இரு தரப்பு வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் பொது அரசாங்க சபை, வர்த்தக சபையின் மூலமான மேம்பாட்டு நிலை குறித்து இதன்போது ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சீன பங்குச் சந்தை திடீரென வீழ்ச்சி கண்டது ஏன்

wpengine

அவுஸ்ரேலிய கடற்படைக்கு சொந்தமான யுத்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்…

wpengine

அரிசியின் விலைகளில் மாற்றம்

wpengine