வணிகம்

பாகிஸ்தானின் ஒத்துழைப்புடன் கரும்புச்செய்கையை அபிவிருத்தி செய்ய திட்டம்…



புதிய நடை முறைகளை பயன்படுத்தி கரும்பு செய்கையை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்திற்கு பாகிஸ்தானின் ஒத்துழைப்பு பெறப்படும் எனவும் இதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள் இலங்கையின் கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் இரு நாடுகளுக்கு இடையில் வணிக நோக்கில் கரும்பு வகைகள் பரிமாறிக் கொள்ளப்படும் எனவும் இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இரு நாடுகளும் கைச்சாத்திடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

துபாயிடம் கொள்வனவு செய்யும் குடிநீருக்கு தடை

wpengine

ஜப்பானின் நிசான் நிறுவனக் கார் இலங்கையில் குறைந்த விலைக்கு..

wpengine

திறந்த சந்தையில் சலுகை விலையில் உரத்தை வழங்க நடவடிக்கை…

wpengine