உள்நாட்டு செய்திகள்

இலங்கையின் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சீன சந்தையில் ஸ்திரமான வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள ரிஷாட்டிற்கு சந்தர்ப்பம்…



அடுத்த மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை சீனாவின் யுனான் மாநிலத்தில் கண்காட்சி ஒன்று நடைபெறவுள்ளது இக் கண்காட்சியில் கலந்து கொளளுவதன் மூலம் இலங்கையின் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சீன சந்தையில் ஸ்திரமான வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள ஓர் அறிய சந்தர்ப்பம் உள்ளதாக இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன வர்த்தகத் தூதுக்குழுவுடனான கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது.

யுனான் மாநிலத்தில் கூட்டு வர்த்தக முயற்சிகளில் முதலீடு செய்வதன் மூலம் புதிய வர்த்தகங்களை ஆரம்பிக்க இலங்கை முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என சீனத் தூதுக்குழுவின் அங்கத்தவர் ஷூஷூன் காவோ தெரிவித்தார்.

எனவே இலங்கையின் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கும் மற்றும் முதலீட்டாலலர்களுக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு சீனத் தூதுக்குழுவின் அங்கத்தவர் ஷூஷூன் காவோ அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சீன தூதுக் குழுவினருடனான சந்திப்பின் போது கடந்த ஆண்டு இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற வர்த்தகத்தின் மொத்த பெறுமதி 460 கோடி டொலரை எட்டியதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் இது மூன்று சதவீத அதிகரிப்பு என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ரூ.1000 – வர்த்தமானி வெளியிடப்பட்டது

wpengine

தேர்தல் சட்டத்திருத்தங்கள் உள்ளடங்கிய சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

wpengine

பல்கலை மாணவரின் மரணம் தொடர்பான விசாரணைக்கு விசேட விசாரணை குழு நியமனம்

Azeem Kilabdeen