உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாண வலய கல்வி அலுவலகத்தினால் அதிபர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் இரத்து…



மேல்மாகாண சபை ஊடாக நிர்வகிக்கப்படும் கொழும்பு கல்வி வலய பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகள், விழாக்களுக்காக மாகாண சபை உறுப்பினர்களை அழைக்குமாறு மேல் மாகாண வலய கல்வி பணிப்பாளர் அதிபர்களுக்கு அனுப்பிய கடிதமானது இரத்து செய்யப்பட்டுள்ளது.

கல்வி அதிகாரிகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக, சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக மேல்மாகாண கல்வி பணிப்பாளர் ஸ்ரீலால் நோனீஸ் விடுத்த உத்தரவுக்கமைய குறித்த கடிதம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, கொழும்பு கல்வி வலய பணிப்பாளர் ஜே.என். சில்வாவால் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதமானது இரத்து செய்யப்படும் கடிதம் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

image_1524034754-3215fba122

Related posts

புதிய வரிச் சட்டமூலத்திற்கு அனைத்து நிறுவன சேவையாளர் சங்கம் கண்டனம்..

wpengine

‘சுரக்ஷா’ காப்புறுதித் திட்டத்தின் கீழ் 70 இலட்சம் ரூபா…

wpengine

எட்கா உடன்படிக்கை மூலம் நாட்டிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

wpengine