உள்நாட்டு செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருந்து நழுவியது வவுனியா நகர சபை…



வவுனியா நகர சபையை எவரும் எதிர்பார்க்காத வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணி இன்று(16) கைப்பற்றியது.

வவுனியா நகர சபைக்கான தவிசாளர் தெரிவு இன்று காலை நடைபெற்றது. வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறஞ்சன் தலைமையில் நடைபெற்ற அமர்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட சேனாதிராசாவுக்கு ஆதரவாக 09 வாக்குகளும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமனுக்கு 11 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன.

இதனடிப்படையில் கௌதமன் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் கௌதமனுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் 03 உறுப்பினர்களும், சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவளித்தனர்.
தமிழரசுக் கட்சியின் சேனாதிராசாவுக்கு ஐ.தே.கவின் ஒரு உறுப்பினர் ஆதரவளித்தார். உப தவிசாளராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த குமராசுவாமி 11 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

####

Related posts

அதிக விலையில் உர மூடைகளை விற்போருக்கு எதிராக நடவடிக்கை…

wpengine

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்

wpengine

அஹ்னாப் ஜசீம் பிணையில் விடுதலை

wpengine