கேளிக்கை

எனக்கு டப்பிங் பானுப்பிரியாவா? கீர்த்தி சுரேஷ் மறுப்பு…



சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநடி ஆகிய படங்கள் உருவாகியுள்ளது. இதில் மகாநடி படம், வரும் மே 9ம் திகதி ஆந்திரா, தெலங்கானா மற்றும் தமிழ்நாட்டில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்திருக்கிறார், கீர்த்தி சுரேஷ். அவருக்கு பானுப்பிரியா டப்பிங் பேசியிருப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். இது குறித்து கீர்த்தி சுரேஷிடம் விசாரித்தபோது, ‘இப்போது நான் நடிக்கும் படங்களுக்கு நான்தான் டப்பிங் பேசுகிறேன்.

மகாநடி தெலுங்கு படத்துக்கு நான் டப்பிங் பேசி முடித்து விட்டேன். மே 9ல் வெளியாகிறது.

அடுத்து நடிகையர் திலகம் படத்துக்கு டப்பிங் பேசுகிறேன். மகாநடி படத்தில் பானுப்பிரியா நடித்துள்ளார். அவரது கேரக்டருக்கு அவர் டப்பிங் பேசியதை வைத்து, எனக்கு பேசியதாக வதந்தி பரவியுள்ளது’ என்றார்.

Related posts

இந்தியா என்ற அடிமைப் பெயர் வேண்டாம் : கங்கனா காட்டம்

wpengine

தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி முறைப்பாடு; இதை செய்தாரா?

wpengine

பிடித்தவருடன் விரைவில் டும் டும் டும்….

wpengine