உள்நாட்டு செய்திகள்

சட்ட விரோத மதுபான போத்தல்களுடன் இருவர் கைது…



மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை பகுதியில் சட்ட விரோதமான முறையில் விற்பனைக்காக கொண்டுசெல்லப்பட்ட மதுபான போத்தல்களை இன்று(13) அதிகாலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மதுபானசாலைகளை இரு தினங்கள் மூடுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நிலையில் சட்ட விரோத மதுபான விற்பனைகளை தடுக்கும் வகையில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி தி.ஹகவத்துற தலைமையில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், புன்னைச்சோலையில் விசேட நடவடிக்கைகயில் ஈடுபட்டிருந்த பொலிஸார் முச்சக்கரவண்டியில் பெட்டிகளில் மறைக்கப்பட்ட நிலையில் கொண்டுசெல்லப்பட்ட குறித்த மதுபான போத்தல்களை கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனங்களுக்கான நேர்முகப் பரீட்சை 17ம் திகதி நிறைவு…

wpengine

இரு காரணங்களுக்காக கருக்கலைப்புக்கு இலங்கை அனுமதி…?

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 751 (UPDATE)

wpengine