உள்நாட்டு செய்திகள்

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு…



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிலர் நேற்று தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு தற்காலிகமாக புதிய அமைச்சர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முழுமையான அமைச்சரவை மாற்றமொன்று சிங்கள, தமிழ் புத்தாண்டின் பின்னர் இடம்பெறவுள்ளதுடன், அது வரையில் இந்த புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர்களின் பெயர் விபரம் வருமாறு

திறன் விருத்தி, தொழில் பயிற்சி மற்றும் விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆராய்ச்சித் துறை அமைச்சராக சரத் அமுனுகம. அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக
ரஞ்சித் சியாம்பலாபிடிய, விளையாட்டுத் துறை அமைச்சராக பைசர் முஸ்தபா,
சமூக வலுவூட்டல், நலன் பேணல், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் தொழில், தொழில் உறுவுகள் அமைச்சராக மலிக் சமரவிக்ரமவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

Related posts

அமைச்சர் மஹிந்த அமரவீர இராஜினாமா!

News Editor

போதைப்பொருள் குறித்த தகவல்களுக்காக விசேட பிரிவு…

wpengine

SAITM தனியார் மருத்துவமனை குறித்து அரச மருத்துவ தொழிற்சங்கம் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை..

wpengine