உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியின் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் இராஜினாமா…



அமெரிக்க ஜனாதிபதியின் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் டாம் பாஸ்சர்ட் (tom bossert) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் அந்நாட்டு அரசின் பல்வேறு முக்கிய துறைகளில் உள்ள தலைமை அதிகாரிகளை மாற்றியுள்ளார். மேலும் சிலர் கருத்து வேறுபாடு காரணமாக தங்களது பதவிகளை இராஜினாமா செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் டாம் பாஸ்சர்ட் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சான்டர்ஸ் இன்று அறிவித்துள்ளார்.

பயங்கரவாதத்துக்கு எதிராக உள்நாட்டு பாதுகாப்பை நிலைநாட்டவும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சைபர் குற்றங்களை தடுக்கவும், ஏராளமான இயற்கை பேரழிவுகளில் திறம்பட செயலாற்றியும் மிக உயர்ந்த நாடான அமெரிக்காவுக்கு டாம் பாஸ்சர்ட் ஆற்றிய பங்களிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளதாக சாரா சான்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐக்கிய நாடுகள் சபைக்கு 72 வருடங்கள் பூர்த்தி…

wpengine

கொரோனா : இரண்டாவது இடத்தில் பிரேசில்

wpengine

ஆந்திராவில் விடுதியில் தீ விபத்து – 11 பேர் பலி

wpengine