உள்நாட்டு செய்திகள்

பிரதி சபாநாயகர் – நவீன் திஸாநாயக்க முறுகல் குறித்து சுயாதீன விசாரணை…



கடந்த 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதத்தின் போது, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவிற்கு, அமைச்சர் நவீன் திஸாநாயக்க மிரட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணை ஒன்றினை முன்னெடுப்பதாக சபாநாயகர் இன்று(06) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவர் தினேஷ் குணவர்த்தன குறித்த சம்பவம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது, அமைச்சர் நவீன் திசநாயக்க, தான் எந்நேரத்திலும் விசாரணைகளுக்கு பதிலளிக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

புறக்கோட்டையில் சில வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை

wpengine

சீ.எஸ்.என் அலைவரிசையின் பணிப்பாளரான காடியா கருணாஜீவவை  கைது செய்ய இன்டர்போலின் உதவி

wpengine

ஹொரணை – கொழும்பு பிரதான பாதையில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் பலி..

wpengine