கேளிக்கை

ஹாலிவுட் படத்தில் ரஜினி பட டயலாக்….



ஹாலிவுட்டில் 2016ம் ஆண்டு வெளிவந்த படம் “டெட்பூல்”. இது ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் மாதிரியான சூப்பர் ஹீரோ படம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலகலக்க வைத்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி வெளிவருகிறது.

இந்தப் படத்தில் ரேயான் ரெனால்ட்ஸ் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருடன் ஜாஸ் போர்லின், மொனோரா பச்சிரின், ஜூலியா டென்னிசன் உள்பட பலர் நடிக்கிறார்கள். டெய்லர் பேட்டஸ் இசை அமைக்கிறார், ஜொனாத்தன் ஷெலா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தியாவில் ஆங்கிலத்துடன் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்த மொழிகளில் இதன் முதல்கட்ட டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அது வைரலாக பரவி வருகிறது. டீசரிலேயே சூப்பர் ஹீரோ ரேயான் ரெய்னால்ட்ஸ் ரஜினியின் பஞ்ச் டயலாக்கை போட்டு கலாய்த்து எடுக்கிறார்.

“வேங்கையன் மகன் ஒத்தையில நிக்கிறேன்னு சொன்னேன். மொத்தமாக வந்துட்டானுங்க” என்பது ஹைலைட். படம் முழுக்கவே இதுபோன்ற கலாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினி மட்டுமல்லாது விஜய், அஜித், விக்ரம், சூர்யா பஞ்ச் டயலாக்குகளையும் படத்தில் இணைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Related posts

புகழ்பெற்ற ஹிந்தி திரைப்பட நடிகர் திலீப் குமார் மரணம்

wpengine

அவெஞ்சர்ஸ் நடிகைக்கு குழந்தை பிறந்தது

wpengine

சர்ச்சையில் அமலாபாலின் புகைப்படம்…

wpengine