உலக செய்திகள்

சாலமன் தீவுகளில் நிலநடுக்கம்…



புவியியல் அமைப்பின்படி ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமன் தீவுகளில் நேற்று 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சாலமன் தீவுவின் தலைநகர் ஓனியாராவில் இருந்து சுமார் 42 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.8 அலகுகளாக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி எச்சரிக்கை ஏதும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சீன தொலை தொடர்பு நிறுவன அதிபர் மகள் கைது…

wpengine

சீனாவில், மாமிச நுகர்வைக் கட்டுப்படுத்த சட்டம்

wpengine

வன்முறை சம்பவங்களில் 15 பேர் படுகாயம்

wpengine