உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதியால் பிரதமர் தலைமையின் கீழ் இருந்த 13 நிறுவனங்கள் நீக்கம்…



பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையின் கீழ் உள்ள தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு உரித்தான 13 நிறுவனங்கள் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நேற்று(28) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட வர்ததமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, பிரதமர் தலைமையிலான தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழிருந்த இலங்கை மத்திய வங்கி பிணையங்கள், செலாவணி ஆணைக்குழு என்பன நிதியமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும், கடன் தொடர்பான தகவல் அலுவலகம், தேசிய சம்பள நிர்ணய சபை, தேசிய காப்புறுதி நிதியம், பொது முரண்பாடுகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான நிதியம், மனித உரிமைகள் அபிவிருத்தி தொடர்பான இலங்கையின் தேசிய சபை, தேசிய இளைஞர் சேவைகள் சபை என்பன உள்ளிட்ட 13 நிறுவனங்கள் மாறப்பட்டுள்ளன.

இதேவேளை, காணி அமைச்சின் கீழ் இருந்த கந்தளாய் சீனி தொழிற்சாலை அமைச்சர் தயா கமகே தலைமையிலான ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சீனாவிடம் கடன் வாங்கிய நாடுகளுக்கு இலங்கை எச்சரிக்கை மணியை அடித்துள்ளது

wpengine

சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதமின்றிய செயல்பாடுகளே, நாடு மீட்சிபெற வழிவகுக்கும் – ரிஷாட் பதியுதீன்

wpengine

எதிர்வரும் வெள்ளிக்கு முன்பதாக ஜனாதிபதியிடமிருந்து விசேட அறிவிப்பு..

wpengine