உள்நாட்டு செய்திகள்

ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பில் இன்று விசாரணை….



ரத்துபஸ்வலையில் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று(28) கம்பஹா நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, கடந்த தின விசாரணையின் போது சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் நீதிமன்றில் அறிவித்திருந்தது.

மேலும், சம்பவம் தொடர்பில், குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, இராணுவ பிரிகேடியர் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் நீதிமன்றில் முன்னிலையான வேளை, அது குறித்த வழக்கு விசாரணையை இன்றைய தினம்(28) வரையில் ஒத்திவைக்கக் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி, குறித்த பிரதேசத்தில் குடிநீருக்காக போராட்டம் நடத்தியவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜெஃப்ரி அலோசியஸ் உள்ளிட்ட ஐவருக்கும் விளக்கமறியலில்..

wpengine

மகரகம நகர சபைக்கு பொதுஜன பெரமுன போட்டியிடுவது குறித்து இன்று தீர்மானம்…

wpengine

தனது வெற்றிக்கு ஹகீம் ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிக்கிறேன் – சஜித்

wpengine