உள்நாட்டு செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து குறித்து ஆராய உயர் நீதிமன்றம் உத்தரவு…



பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டாரா என்பது தொடர்பில் ஆராயுமாறு சட்ட மா அதிபருக்கு இன்று(23) உயர் நீதிமன்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று(23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டிருந்த கருத்துக்கள் தொடர்பாகவே இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதிமன்ற வளாகத்தில் வைத்து மீண்டும் ரஞ்சன் ராமநாயக்க நீதிபதிகளை அவமதிக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

wpengine

பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு

wpengine

75 ஆயிரம் ரூபாவை மாதாந்தம் மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்க அரசு தீர்மானம்

wpengine