உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாகிஸ்தானின் குடியரசு தினம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதி…



பாகிஸ்தான் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.

நேற்று(22) பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்; விமான நிலையத்தில் தரையிறங்கிய ஜனாதிபதி தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவிற்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

நூக்கான் விமானப்படை விமானத்தில் தரையிறங்கிய ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவை பாகிஸ்தான் ஜனாதிபதி மம்மூன் ஹுசைன் தலைமையிலான உயர்மட்ட ராஜதந்திரிகள் வரவேற்றார்கள். இங்கு ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் சமுதித சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயத்தில் உயர்மட்ட சந்திப்புக்களும் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான் ஜனாதிபதி மம்நூன் ஹூசைன், பிரதம மந்திரி ஷஹீட் அபாசி ஆகியோருடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு வர்த்தக, பொருளாதார, கல்வித்துறை உறவுகளை மென்மேலும் வலுப்படுத்துவது பற்றி விசேட கவனம் செலுத்தப்படும். கல்வி, சுற்றுலா துறைகள் சார்ந்து நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெளித்தொடர்புகளின்றி வெள்ளத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட மாந்தை கிழக்கு சிராட்டிக்குளம்..!

wpengine

மன்னார் அபிவிருத்தி தொடர்பாக முற்றிலும் உண்மைக்கு புறம்பாக கருத்து தெரிவிக்கும் ஞானப்பிரகாசம்…

wpengine

உயிர்த்த ஞாயிறு போன்றதொரு தாக்குதலா?

wpengine