உள்நாட்டு செய்திகள்

முறையற்ற விதத்தில் குப்பை வீசுபவர்களை கைது செய்ய நடவடிக்கை…



முறையற்ற விதத்தில் குப்பைகளை வீசுபவர்களை கைது செய்வதற்காக சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகளை கண்காணிப்பில் ஈடுபடுத்த கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் சூழல் பாதுகாப்புப் பிரிவுடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளர் லலித் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தரம் பிரிக்காமல் குப்பைகளை எறியும் நடவடிக்கை அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாநகர பதில் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணிவரையான காலப்பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகளில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

மேலும். கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பொரளை, கொம்பனித்தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் முறையற்ற விதத்தில் குப்பைகள் வீசப்படும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் சூழல் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

கோஹ்லியை பாராட்டிய காதலி.. கடுப்பில் மேத்யூஸ்..

wpengine

பிரிகேடியர் பிரியங்க பொர்னாண்டோ’வுக்கு எதிராக வெஸ் மினிஸ்டர் நீதிமன்றில் வழக்கு..

wpengine

இலங்கையில் அடுத்த ஆட்சி குறித்து பிரபல சோதிடரின் பரப்பரப்பு ஆருடம்

wpengine