உள்நாட்டு செய்திகள்

ஜா-எல ஆடைத்தொழிற்சாலையின் நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை…



ஜா-எல- ஏக்கல பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையின் நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிசார் தீர்மானித்துள்ளனர்.

ஆடை தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக சுமார் 47 ஊழியர்கள் சுகயீனமடைந்து கம்பஹா றாகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

வாயு கசிவுவை சீர் செய்யும் வரை தொழிற்சாலையை தற்காலிகமாக மூடிவிடுமாறு பொலிசார், நிர்வாகத்திற்கு நேற்று முன்தினம் அறிவித்திருந்தாலும் அறிவித்தலையும் மீறி ஆடைத் தொழிற்சாலையைத் திறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மீண்டும் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 52 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுமாறு நீர்கொழும்பு நீதிமன்றம் பொலிசாருக்கு இன்று(21) உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் விடுமுறை இரத்து

wpengine

அரிசி மற்றும் மரக்கறி விலைகளில் வீழ்ச்சி

wpengine

PHI இற்கு இடையூறு விளைவித்தவருக்கு விளக்கமறியல்

wpengine