ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

விளையாட அழைத்து சென்று 06 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த காமுகன்



கருவலகஸ்வெவ பகுதியல் 06 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் தப்போவ பகுதியில் வசிக்கக் கூடிய 30 வயதுடைய விவசாயம் செய்யக்கூடிய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் வீட்டிற்கு வேலைக்காக சென்ற குறித்த சந்தேக நபர், தனது பிள்ளைகளுடன் விளையாட வருமாறு குறித்த சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

இதற்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரும் அனுமதி வழங்கி உள்ளனர்.

சைக்கிள் ஒன்றில் குறித்த சிறுமியை அழைத்து செல்லும் வழியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி வீடு வந்ததும் தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கருவலகஸ்வெவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதோடு குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Related posts

73 பொலிசாருக்கு இடமாற்றம் மற்றும் நியமனம்

wpengine

கொரோனாவினால் சீரழிந்த நாடுகள் இவைதான்

wpengine

மஹிந்த குடும்பத்தை காப்பாற்ற மைத்திரி திட்டம்

wpengine