உள்நாட்டு செய்திகள்

மருந்து மூலிகைகளை உற்பத்தி செய்வதற்கான திட்டம்…



தேசிய மருந்து தயாரிப்புக்குத் தேவையான மருந்து மூலிகைகளை உற்பத்தி செய்வதற்கான திட்டமொன்று ஆரம்பிக்கப்படுமென்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அனுராதபுர, இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தின் வடமத்திய மாகாண பிரதேச அலுவலகமும், விற்பனை நிலையத்தையும் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

மேலும், ஆயுர்வேதத் திணைக்களத்திற்கு உட்பட்ட மூலிகைகளும் உற்பத்தி செய்யப்படவுள்ளன. மூலிகைக் கன்றுகளின் உற்பத்திக்காக அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பயன்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

Related posts

பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தியதன் பின்னர் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்..

wpengine

2 கிலோ கிராமுக்கும் அதிக பெறுமதியான கஞ்சா தொகையுடன் பெண் ஒருவர் கைது…

wpengine

இரண்டாம் தவணை விடுமுறை இன்று ஆரம்பம்

wpengine