ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இந்திய அணியின் பயிற்சியின் போது காயத்திற்கு உள்ளாகிய ‘ராகம வீரரின்’ முழுமையான செலவினை பொறுப்பேற்கத் தயார் – ரோஹித் ஷர்மா..



இலங்கை சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டுள்ள இந்திய அணியினர் மைதானத்தில் வலைப் பயிற்சியில் ஈடுபடும் போது பந்து வீசிக் கொண்டிருந்த ராகம கிரிக்கெட் கழகத்தின் வீரர் ஒருவரின் முகத்தில் பந்து தாக்கியதில் காயத்திற்கு உள்ளாகி தற்போது நவலோக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த வீரருக்கான முழுமையான மருத்துவ செலவினையும் தான் பொறுப்பேற்பதாக இந்தியா அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா தெரிவித்திருந்தார்.

இலங்கையுடனான முதலாவது போட்டிக்கு முன்பதாக நடைபெற்ற பயிற்சியின் போதே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகின்றது.

எவ்வாறாயினும், அவரது முழுமையான செலவினை இந்தியா கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளமையால் குறித்த வீரருக்கு தேவையான மேலதிக செலவுகள் அல்லது எந்தவொரு செலவினையும் பொறுப்பேற்கத் தயார் என ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

Related posts

facebook ஊடாக ட்ரம்ப் இற்கு ஆதரவளித்தமைக்கு வருந்துகிறோம்.. (Photos)

wpengine

முஸ்லிம் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிக்கு தடை…! 700 பள்ளிகளுக்கு பூட்டு..

wpengine

விஷாலுக்காக காத்திருக்கும் பாண்டிராஜ்

wpengine