ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சீகிரியாவில் இருந்து மீட்கப்பட்ட சிங்க உருவத்தினால் வெளியாகிறது வரலாற்றுத் தகவல்கள்…



சீகிரியாவில் வடக்கு நீர் அகழி பகுதியில் மேற்கொண்ட அகழ்வின் போது சிங்க உருவம் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், சீகிரிய தொடர்பான பல முக்கிய வரலாற்றுத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அண்மையில் மேற்கொண்ட அகழ்வில் சிங்க உருவத்திற்கு மேலாக முத்துக்கள், இரும்பு தொல்பொருட்கள் மற்றும் சில மட்பாண்டங்களும் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பிரசாந்த குணவர்தன தெரிவித்துள்ளார்.

அகழ்வின் போது மீட்கப்பட்ட மட்பாண்டங்கள், வெளிநாட்டு தோற்றங்களை கொண்டுள்ளமையால் சீகிரியாவில் காசியப்பர் ஆட்சியின் போது சர்வதேச தொடர்புகள் காணப்பட்டிருக்கலாம் என்பது பேராசிரியரின் கருத்தாகும்.

குறித்த இந்த ஆட்சியின் போது ரோம் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தக தொடர்புகள் காணப்பட்டுள்ளமையும் இதன் ஊடாக புலப்படுகின்றது.

 

####

Related posts

இலங்கையில் பதிவாகிய வெடிப்புகள் : ஜனாதிபதிக்கு கண்டனம் – பொலிஸ் மீளவும் சாகலவுக்கு…

wpengine

புர்கா நிரந்தரமாக தடைசெய்யப்படுமா? மதரஸாக்கள் அமைச்சின் கீழ் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

wpengine

ஆவி பீதியில் சசி! போயஸ் கார்டனில் நடுராத்திரி நடுக்கம்!

wpengine