உள்நாட்டு செய்திகள்

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளை இல்லாமல் செய்தல் காலத்தின் தேவை…



சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளை இல்லாமல் செய்ய வேண்டும் என இன்று (15) மல்வத்து மஹநாயக தேரரை சந்திக்க சென்ற போது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஆரம்ப காலங்களில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்படாமல் இருந்ததால் நாட்டில் உள்ள மக்களுக்கு இடையில் ஒற்றுமை காணப்பட்டது என அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

தீவிரவாத அமைப்புகள் உலகில் உள்ள முஸ்லிம்களின் மனதில் பயங்கரவாதத்தை விதைத்து முஸ்லிம்களின் மனதை சிதைக்க முயன்ற போதிலும், எமது நாட்டிற்குள் அவ்வாறன செயற்பாடுகளை மேற்கொள்ள இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் ஒருபோதும் வழிவிடப் போவதில்லை எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

-Riz

Related posts

பிள்ளையானின் சாரதி சிஐடியினால் கைது!

Azeem Kilabdeen

பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் சங்கத்தினரால் வேலைநிறுத்தப் போராட்டம்.

wpengine

ரயில்வே பணிப்புறக்கணிப்பு இரத்து

wpengine