ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலா அல்லது தேரர்களுக்கு இடையிலான சந்திப்பின் பேரிலா.. – ஞானசார தேரரின் ஜப்பான் பயணம்….? (PHOTOS)



ஜப்பானிற்கு அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் ஜப்பானில் அமைந்துள்ள இலங்கை பௌத்த விகாரை தலைமை தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று(13) டோக்கியோ நகரில் இடம்பெற்றது.

பௌத்த மதத்தின் மேம்பாட்டிற்காக ஜப்பானிலிருந்து குறித்த தேரர்கள் ஆற்றிவரும் சேவைக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி, இளம் தலைமுறையினருக்கு எமது கலாசார விழுமியங்களை தெளிவுபடுத்தி அவர்களை சிறந்த விழுமியப் பண்புகளையுடைய தலைமுறையாக கட்டியெழுப்ப வேண்டியதன் தேவை குறித்து இதன்போது தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், சமயத் தலைவர்களுக்கு இதில் பாரிய பொறுப்பு இருப்பதாக தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரும் பங்கேற்றிருந்ததாக சமூக ஊடகங்களில் கருத்துப் பரிமாற்றப்பட்டு வருகின்றது. இவரது ஜப்பான் பயணம் ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலா அல்லது தேரர்களுக்கு இடையிலான சந்திப்பு என்பதன் பேரில் அழைக்கப்பட்டாரா என தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் போது குறித்த தேரர் இலங்கையில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Media preview

 

-####

Related posts

செயல்திறன் மிக்க வீரரான மஷ்ரபே பாராளுமன்றுக்கு தேர்வு…

wpengine

அமைச்சர் ராஜித’விற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம்…

wpengine

அமெரிக்க நடுங்கவைத்த தகவல்; இஸ்ரேல் மீது குண்டு மழை

wpengine