உள்நாட்டு செய்திகள்

வைபர் வலைத்தளம் மீதான தடை நீக்கம்…



இன்று(13) நள்ளிரவு முதல் வைபர் – செயலி சமூக வலைதளத்தை பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வர்த்தக சமூகத்தினருக்கும் சுற்றுலா துறைசார்ந்தவர்களுக்கும் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கும் இந்தத் தடை காரணமாக கடந்த பல நாட்களில் ஏற்பட்ட நெருக்கடி குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மையில் சில பிரதேசங்களில் ஏற்பட்ட நாசகாரச் செயல்களுக்காக சில தரப்பினர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தியதால் இவற்றின் மீது தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.

இதேவேளை சமூக வலைத்தளங்கள் மீதான தடை குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை அளவில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்படலாம் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அங்கு சுட்டிக்காட்டினார். என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சஹ்ரான் உடன் ஆயுத பயிற்சி பெற்ற மூவர் கைது.

wpengine

திருகோணமலை மாவட்ட மாணவர்களுக்கு நியாயம் வழங்குவதில் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் தோல்வி கண்டுள்ளார். – இம்ரான் எம்.பி..!

wpengine

மின் கட்டணத்தை 30% இனால் குறைக்க PUCSL கோரிக்கை

News Editor