உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் ஜப்பான் பிரதமருக்கிடையில் சந்திப்பு…



உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(14) ஜப்பான் பிரதமர் ஹின்சோ அபேயை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ஜப்பான் டோக்கியோவில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் அழைப்பையேற்று கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பான் பயணமானார்.

இதேவேளை, ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஜப்பானில் தங்கியிருப்பார் என ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

யாழில் கேரளா கஞ்சா மீட்பு

wpengine

மருத்துவபீட கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்..

wpengine

வரவு – செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றில்

wpengine